பத்துமலை திருத்தலம் தைப்பூச விழாவில் தன்னார்வத் தொண்டு செய்த பரிமளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு சிறப்பு!

கோலாலம்பூர் பிப் 13-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் தன்னார்வத் தொண்டு செய்த பரிமளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு கோவில் நிர்வாகம் விருது பாராட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி பாரிமளா கிருஷ்ணா அவர்களுக்கு, அவரின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் பாராட்டு, ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா மற்றும் அறங்காவலர் டத்தோ சுரேஸ் ஆகியோரால் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பாரிமளா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார்.

பல ஆண்டுகளாக இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னார்வ சேவை, சமுதாய சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

“பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது,” என திருமதி பாரிமளா கிருஷ்ணா தனது நன்றியை தெரிவித்தார்.

பரிமளா கிருஷ்ணா, இவருடன் கோலாலம்பூரை சேர்ந்த திருமதி பத்மாவதி, பிரீக்ஃபீல்ட்ஸ் சேர்ந்த
.திருமதி எம்.எஸ்.ராணி, திரு. மகேந்திரன் மற்றும் கோலாலம்பூர் திரு. கோவிந்தன்,ஆகியோர் விருது பெற்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles