பினாங்கில் உள்ள உள்ள இந்து கோவில்கள் விஷயங்களில் தலையிடாதீர்கள் – செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் எச்சரிக்கை!

கோலாலம்பூர் பிப் 24-
பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களைச் சார்ந்த விவகாரங்களில் சிலர் தலையிட்டு இனவாத உணர்வுகளை தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று செனட்டர் டாக்டர் ஏ. லிங்கேஷ்வரன் எச்சரித்துள்ளார்.

இந்து கோவில்கள் தொடர்பான பிரச்சினைகள் மிகவும் நுணுக்கமானவை என்பதால், அவற்றை பொறுப்புடன் மற்றும் அமைதியை பேணும் வகையில் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், கோவில்கள் குறித்து தேவையற்ற தலையீடுகள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், அரசியலாக்கம் அல்லது இன அடிப்படையிலான தூண்டுதல்கள் இந்த விவகாரங்களில் இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் மூலம் சரியான முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய ஒரு விஷயத்தில், கூட்டாட்சி மட்டத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் ஒரு தேசிய இந்து அறப்பணி வாரியத்தை நிறுவ வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

“அனைத்து பாரம்பரிய கோயில்களையும் அதில் சேர்க்கவும்,” என்று அவர் கூறினார்.

பினாங்கில் PHEB என்ற பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உள்ளது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு அவர் இதை பரிந்துரை செய்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles