அல்-குர்ஆனை மிதித்த விவகாரம் !தனிப்பட்ட தவறுகளை சர்ச்சையாக்க வேண்டாம்! :டாக்டர் சத்தியா வேண்டுகோள்

கோலாலம்பூர் பிப் 27-
உலு சிலாங்கூர் –
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அல்-குர்ஆனை மிதித்ததாகக் கூறப்படும் சம்பவத்தை பற்றி பொதுவான தீர்ப்புகளை வழங்க வேண்டாம் என்று
சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, இன அல்லது மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், தவறுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட நபர்களே ஏற்க வேண்டும்.

மாறாக உணர்ச்சிகளையும் பிரிவினையையும் தூண்ட இலக்கவியல் தளங்களைப் பயன்படுத்தும் நபர்களின் செயல்கள்தான்.

நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நபர்களால் ஏற்கப்பட வேண்டும். ஆனால் எந்தக் குழுவும் அதை பொதுமைப்படுத்தப்படக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒருவரின் பின்னணியைக் குறை கூறுவது அல்ல. மாறாக தவறு செய்த தரப்பினரின் மீது கவனம் செலுத்துவதே கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கொள்கையாகும்.

அண்மையில் வைரலான மலேசியா, பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக குவாந்தனில் போலிசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு சந்தேக நபர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles