
அந்நிய தொழிலாளர்களை அதிகளவில் தருவிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல.
இருப்பினும் மோசமாக பாதிக்கப்பட்ட தொழில் துறைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்நிய தொழிலாளர்கள் தருவிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருக்கிறது
.
15 நாடுகளில் இருந்து இப்போது அந்நிய தொழிலாளர்கள் தருவிக்கப்படுகிறார் என்று அவர் சொன்னார்.
அந்நிய தொழிலாளர்களை தருவிப்பதில் இப்போது தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன..
குறிப்பாக மூன்றே நாட்களில் அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் இன்று நாடாளுமன்றத்தில் அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு. குறித்து கேள்விகளை எழுப்பினார்..
இவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

