மனித வள அமைச்சர் சிவகுமாரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறும்

மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரின் மக்கள் சந்திப்பு நாடு முழுவதும் நடைபெறும் என்று மனிதவள அமைச்சை சேர்ந்த தி.கண்ணன் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் சிவக்குமார் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அதன் அடிப்படையில் மனித வள அமைச்சின் கீழ் இருக்கும் இலாகாக்களுடன் அவர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளே ஏற்பாடு செய்து வருகிறார்.

அமைச்சர் சிவகுமார் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டதால் இன்றைய இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அவரின் பிரதிநிதியாக துணை அமைச்சர் முஸ்தபா சக்மூட் இதில் கலந்து கொண்டார்.
மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ, எச்ஆர்டி கோர்ப், நியோஸ், ஆழ்பல இலாகா உட்பட பல இலாகாக்கள் முகாம் அமைத்து வரும் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கி வருகிறார்.

நம் சமுதாயத்தில் அடையாள அட்டை பிரச்சினை இன்னும் தீராமல் உள்ளது.

அவ்வகையில் டிரா மலேசியா அமைப்பினர் இங்கு முகாம் அமைத்து அடையாள அட்டை பிரச்சினை உள்ளவர்களுக்கு உரிய சேவைகளை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கல்வி, தொழில் உதவி உட்பட பல பிரச்சினைகளுடன் மக்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சின் தலைமையகத்தில் தான் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஆனால் இம்முறை இந்த மக்கள் சந்திப்பை நாடு முழுவதும் நடத்த மனிதவள அமைச்சர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles