மனித வள அமைச்சர் சிவகுமார் மூலம் இந்திய உணவகங்கள் எதிர் நோக்கிய அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கிறது

மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மூலம் இந்திய தொழில்துறைகளில் குறிப்பாக இந்திய உணவகங்களில் நிலவி வரும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு பிறந்து வருகிறது என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி உற்சாகத்துடன் தெரிவித்தார்.

மனித வள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து எங்கள் பிரச்சனைகளை முன் வைத்தோம்.

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இந்திய மற்றும் இந்திய முஸ்லிம் உணவகங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதை அவரிடம் எடுத்துரைத்தோம்.

மனித வள அமைச்சர் சிவகுமார் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இப்போது அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு பிறந்துள்ளது

தக்க நேரத்தில் எங்களுக்கு உதவிய மனித வள அமைச்சர் சிவகுமாரின் பணியை பாராட்டுகிறோம்.

இன்று நாடாளுமன்றத்தில் மனித வள அமைச்சரை நேரடியாக சந்தித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles