மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் நாளை மக்கள் குறைகளை கேட்டறியும் சந்திப்பு

மனித வள அமைச்சராக வ. சிவகுமார் பதவி ஏற்றது முதல் தனது பணியை திறம்பட செய்து வருகிறார்.

குறிப்பாக தொழில் துறைகளில் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு கண்டுள்ளார்.

இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார்.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி புதன்கிழமை புத்ரா ஜெயாவில் உள்ள தமது அமைச்சில் மக்கள் குறைகளைக் கேட்டறியும் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12. 00 மணிவரை நடைபெறும் இந்த சந்திப்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளை அமைச்சர் சிவகுமாரிடம் முன் வைக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles