இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

தெஹ்ரான், மார்ச் 6- இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அமெரிக்காவிற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 இந்தத் தாக்குதலை ஒரு “கொடுமை” என்று அவர் வர்ணித்துள்ளார்.வியாழக்கிழமை ‘X’ தளத்தில் பதிவிட்ட அவர், “ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல் தொலைவில், கடலில் அமெரிக்கா ஒரு கொடூரமான செயலைச் செய்துள்ளது.

எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்: அமெரிக்கா தான் தொடங்கிய இந்தச் செயலுக்காகப் பின்நாட்களில் மிகவும் வருந்தும்,” என்று கூறினார்.

சுமார் 130 பணியாளர்களுடன் சென்ற ‘IRIS Dena’ என்ற அந்தப் போர்க்கப்பல், இந்திய கடற்படையின் விருந்தினராகப் பங்கேற்றுவிட்டு சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னறிவிப்பின்றித் தாக்கப்பட்டதாக அரக்ச்சி தெரிவித்தார்.

 புதன்கிழமை அன்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்ப்பிடோ (torpedo) ஏவுகணை மூலம் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தகைய தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இலங்கை கடற்படை நடத்திய மீட்புப் பணியில், இதுவரை 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கப்பலில் இருந்த சுமார் 180 பேரில் 32 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles