- டத்தோ ஷாகுல் டாவூட்


நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை கொண்ட நாடாக மலேசியா உருவாகும்.
தொழிலாளர்கள் தங்கள் மேற்கொண்டு வரும் துறைகளி உரிய பயிற்சிகளை மேற்கொண்டு வரும் பட்சத்தில் வரும் 2025 முதல் 2028ஆம் ஆண்டுக்கு மலேசியா பொருளாதார ரீதியில் வெற்றி அடைந்த நாடாக உருவாகும்.
இதற்கான சரியான வழிதடத்தில் மலேசியா தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது என்று எச்.ஆர்.டி. கோர்ப் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஷாகுல் டாவூட் கூறினார்.
12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் மலேசியா தொழிலாளர் வர்கத்தில் 35 சதவீதம் தாங்கள் மேற்கொண்டு வரும் துறைகளில் நிபுணத்துவம் வாய்தவர்களாக இருக்க இலக்கு கொண்டு உள்ளது.
அதற்கான் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று புத்ராஜெயாவில் நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி பட்டறையை தொடக்கு வைத்த டத்தோ ஷாகுல் மேற்கண்டவாறு கூறினார்.
எச்ஆர்டி போர்ப் ஏற்பாட்டிலான இந்த இப்பயிற்சி நேற்று முதல் நாளை வரை நடைபெறவுள்ளது.
இதில் 200 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா வெற்றியடைந்த நாடாக் உருவாக்குவதற்கும் அதற்காக நிபுணத்துவமான தொழிலாளர் வர்கத்தை உருவாக்குவதற்கும் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதற்கும் எச்ஆச்டி போர்ப் எப்போதுமே தயாராக இருக்கும் என்று அவர் கூறினார்.

