

மனித வள அமைச்சின் TVET தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் பேரா மாநிலத்தில் கல்வியில் பின் தங்கியுள்ள 10,000 மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் இன்று தெரிவித்தார்.
மனித வள அமைச்சர் வ. சிவகுமாரை மரியாதை நிமித்தமாக பேராக் மாநில அரசாங்கத்தின் சார்பில் பேராக் ஆட்சிக் குழு அ. சிவநேசன் தலைமையிலான பேராளர்கள் இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
தீவேட் தொழில் திறன் பயிற்சி மூலம் மனித வள அமைச்சு நாட்டில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கல்வியில் பின் தங்கியுள்ள பத்தாயிரம் மாணவர்களுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சர் சிவகுமார் உதவியோடு பேராக்கில் பல மாவட்டங்களில் தீவேட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றார்.
மனித வள அமைச்சர் சிவகுமாருடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பேராக் மாநிலத்தில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க அவர் உதவ முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
பேராக் மாநிலத்தில் புறநகர் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கும் இந்த தொழில் திறன் பயிற்சி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

