எசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஹரி ராயா உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு – டத்தோஸ்ரீ வான் அஸிசா கலந்து கொண்டார்

கோலாலம்பூர், மார்ச் 17-
டத்தோ பி.வி.அப்துல் ஹமிட் தலைமையிலான எசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு கோலாலம்பூரில் உள்ள அல் நஜிஹின் பள்ளி வாசலில் வசதி குறைந்த மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிசா வான் இஸ்மாயில் கலந்து கொண்டார்.


இந்த புனித ரமலான் மாதத்தில் வசதி குறைந்த மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்குவது சிறந்த செயலாகும். அதோடு, இந்த உதவியானது அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாட வழி செய்யும் என டத்தோ அப்துல் ஹமிட் கூறினார்.

அந்த வகையில் அப்பகுதியை சேர்ந்த சுற்று வட்டார மக்களுக்கு ஹரி ராயா உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் டத்தோஸ்ரீ வான் அஸிசா, டத்தோ அப்துல் ஹமிட் ஆகியோர் பொருட்களை எடுத்து வழங்கினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles