
மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய திருமுறை விழா வரும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 9.00 மணிக்கு பத்துமலை தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெறுகிறது.
மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் தலைமையில் நடைபெறும் இந்த திருமுறை விழாவில் நாடு தழுவிய அளவில் மாணவர்களுகள் திருமுறை விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி இராமசாமி அவர்கள் சிறப்பு வருகை புரிந்து காலை பத்து மணிக்கு திருமுறை விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மாலையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் வருகை புரிந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கிறார்

