

பேராக் மாநிலத்தில் தைப்பிங் லாரூட் ஜாலான் காக்கி புக்கிட் ஸ்ரீ தண்டாயுபாணி ஆலயம் தற்போது இருபது லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு இன்னும் நிதியுதவி தேவைப்படுகிறது.
இந்நிலையில் ஆலய கட்டுமான பணிகளுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் மூன்று லட்சம் வெள்ளியை வழங்கி உதவிக் கரம் நீட்டும்படி தைப்பிங் இந்து தேவலாயா சபா விண்ணப்பம் செய்துள்ளது.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆலய நிர்வாகத்தினர் கட்டுமான பணிகளுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி, மனித வள அமைச்சின் சிறப்பு செயல்பாட்டு பணிகளின் அதிகாரி மகா கணேஷ் ஆகியோர் நேற்று ஆலயத்திற்கு வருகை புரிந்து ஆலயத்தை பார்வையிட்டனர்.
இந்த ஆலயம் முறையாக கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் காண்பது தொடர்பில் ஆலய நிர்வாகத்துடன் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும்
ஆலய கட்டுமான பணிகளுக்கு உதவ மனித வள அமைச்சர் சிவகுமார் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.

