ஜொகூர் மாநில தேர்தலில் ஜெமெந்தா தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக சிலாங்கூர் பிபிபி கட்சி தீவிர பிரச்சாரம்!

.ஜொகூர் பாரு ஜூலை 8-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக பிபிபி கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளது.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா உட்பட அனைத்து முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஜொகூர் ஜெமெந்தா சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மசீச வேட்பாளர் சீ ஆன் கியாப் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியினர் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு இதுநாள் வரை நாங்கள் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறோம்.

தேசிய முன்னணி வெற்றிக்கு தன்னலம் கருதாமல் பிபிபி கட்சி உழைத்து வருகிறது என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles