
ஜொகூர் பாரு ஜூலை 8-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் பாலோ தொகுதியில் டாக்டர் ரூபன் போட்டியிடுகிறார்.
ஜசெக கட்சியின் சார்பில் போட்டியிடும் இவர் மிகச் சிறந்த இளம் வேட்பாளர் ஆவார்.
கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து சேவையாற்றி இன்று ஒரு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாலோ தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற இவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் டாக்டர் ரூபனை வெற்றி பெற செய்யும்படி பாலோ சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

