பாலோ சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் ரூபன் தீவிர பிரச்சாரம்!

ஜொகூர் பாரு ஜூலை 8-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாலோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ரூபன் தற்போது இறுதி கட்ட பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்.

ஜனநாயக செயல் கட்சி (DAP) சார்பில் போட்டியிடும் இந்திய இளம் வேட்பாளர் டாக்டர் ரூபன், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

மேலும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், தொகுதியின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களையும் விளக்கி வருகிறார்.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, குடியிருப்புப் பகுதிகள், கிராமங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு நேரில் சென்று மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்த அவர், அனைவருக்கும் சமமான வளர்ச்சி, மேம்பட்ட உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க உறுதியளித்தார்.

பொதுமக்களுடன் கலந்துரையாடிய டாக்டர் ரூபன், மக்களின் நம்பிக்கையைப் பெற்று சேவை செய்வதே தனது முக்கிய இலக்கு என்றும், அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

பிரசாரத்தில் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்று டாக்டர் ரூபன் வெற்றிக்கு அயராது உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles