
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11-
மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள் எப்படி சங்கத்தை வழி நடத்தப் போகிறார்கள் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேள்வியை எழுப்பினார்.
மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆலய பொறுப்பாளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
மலேசிய இந்து சங்கத்தில் மாற்றங்களை செய்யப் போகிறோம் என்று கூறுகிறார்கள்.
இந்த ஒரு ஆண்டாக பதவியில் இருந்தார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்.
எம்ஏசிசி எனப்படும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – நிறுவன ஆணையத்தில் அடிக்கடி புகார் செய்து சங்கத்திற்கு கெட்ட பெயரைதான் தேடி தந்தார்கள்.
எதையும் செய்யாதவர்கள் இப்போது எப்படி சங்கத்தை வழி நடத்துவார்கள் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
வரும் ஜூலை 19 ஆம் தேதி பண்டார் சன்வே திருமுருகன் கோவில் மண்டபத்தில் மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் 9 உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
என் தலைமையில் வெற்றி அணி சார்பில் சுகுமாரன்,
முனீஸ்வரன்,
குமார் ஆறுமுகம்,
எம் ராதா,
பரமசிவன் ,
பொன் சந்திரன்,
உமா சுதன், விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்கள்.
என் தலைமையில் மலேசிய இந்து சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ மோகன் ஷான், நடப்பு பொருளாளர் ஏரா பெருமாள், துணை தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

