
கோலாலம்பூர் ஜூலை 11-
பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் மற்றும் லெம்பா பத்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பட்சில் அவர்களுக்கு DPPN எனும் டத்தோஸ்ரீ உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் அவர்களுக்கு டத்தோஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த தருணத்தில் டத்தோஸ்ரீ பாமி பட்சில் அவர்களுக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு டத்தோஸ்ரீ பாமி பட்சில் பக்கப்பலமாக இருக்கிறார்.
காசே ஹவானா திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிதியுதவி கிடைக்க பேருதவி புரிந்துள்ளதை மறுக்க முடியாது என்று முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

