சைட் சாடிக் விடுதலையைகூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்தது!

புத்ரா ஜெயா ஜூலை 13-
குற்றவியல் நம்பிக்கை மோசடி, சொத்து முறைகேடு, பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் விடுவிக்கப்பட்டதை, கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உறுதி செய்தது.

இதன் மூலம், அவரது அரசியல் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த மூன்றாண்டு கால சட்டப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.

வழக்குத் தரப்பின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த பெரும்பான்மையான நீதிபதிகள், மூவார் நாடாளுமன்ற உறுப்பினரின் தண்டனையை ரத்து செய்ததில் மேல்முறையீட்டு நீதிமன்றம் சரியாகவே செயல்பட்டது.

மேலும் மேல்முறையீட்டு நிலையில் மேலும் தலையிட எந்த அடிப்படையும் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர்.

ருசிமா கசாலி, கோலின் லோரன்ஸ் செக்குவேரா ஆகியோர் பெரும்பான்மைத் தீர்ப்பில் இருந்தனர்.

அதேசமயம் அபு பக்கர் ஜெய்ஸ் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த மேல்முறையீட்டை விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles