
ஜொகூர் பாரு ஜூலை 13-
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு எனது வாழ்த்துகள்.
இனி முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எனது வாழ்த்துகள்.
மேலும் செழிப்பான மற்றும் முற்போக்கான ஒரு மாநிலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவும், முன்னேறிச் செல்லவும் இதுவே சரியான நேரம்.
தேசிய முன்னணி தனது பொறுப்புகளை மாநிலம், அதன் மக்களின் நலனுக்காக நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

