நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போகும் ம இகா வேட்பாளர்கள் யார்? அரசியல் கண்ணோட்டம்

கோலாலம்பூர் ஜூலை 14-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ள வேளையில் இப்போது அனைவரின் பார்வையும் நெகிரி செம்பிலான் மீது திரும்பி உள்ளது.

ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணி கோட்டையாகும். அதேசமயம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் மிகவும் செல்வாக்கு பெற்றது.

ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக வீசிய அலை நெகிரியில் வீசுமா என்று மக்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தேசிய முன்னணி சார்பில் ம இகா வேட்பாளர்கள் யார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிரம்பான் ராசா தொகுதி தலைவர் கிருஷ்ணன் அவர்கள் கட்சிக்கு, பல ஆண்டுகள் சேவையாற்றியவர்.

நெகிரி செம்பிலான் மாநில ம இகா தொடர்பு குழு துணை தலைவராக பதவி வகிக்கிறார். மக்களுக்கு நன்கு அறிமுகமான அரசியல் பிரமுகர் ஆவார். வேட்பாளர் பெயர் பட்டியலில் இவரின் பெயரும் அடிபடுகிறது.

டத்தோ தினாளன் ராஜகோபால் தற்போது ம இ கா தேசிய தகவல் தொடர்பு துறை தலைவராக இருக்கிறார்.

ம இகா அரசியல் வரலாற்றில் மிகவும் பிரபலமானவர். தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் தீவிர அரசியலில் காலடி எடுத்து வைத்து இன்று வரை சேவையாற்றி வருகிறார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் மனம் தளராமல் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ம இகா தேசிய மகளிர் அணி துணை தலைவி டாக்டர் தனலெட்சுமி கடந்த தேர்தலில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் மனம் தளராமல் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் தேசிய அளவிலும் பிரபலமான பெண் அரசியல்வாதியாக இவர் வலம் வருகிறார். மகளிர் அணி சார்பில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் சாத்தியம் உள்ளது.

ம இகா புத்ரா மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்த தயாளன் பால்ராஜ் இளைஞர் அணி மற்றும் தேசிய அளவில் பேசப்படும் ஒரு முன்னணி அரசியல் வாதியாக உருவெடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

சிறந்த சமூக சேவையாளர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரின் பெயரும் பலமாக அடிபடுகிறது.

ராசா தொகுதி கிளைத் தலைவர் ராஜேந்திரன் கட்சிக்காக மற்றும் மக்களுக்காக கடுமையாக உழைத்தவர்.

கடந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக கருதப்பட்டார். ஆனால் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணி அமைத்ததால் இவருக்கு வாய்ப்பு கைகழுவி போனது.

நெகிரி செம்பிலான் மாநில மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இவர் அயராது உழைக்கக் கூடியவர் இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

தெலுக் கெமாங் தொகுதி முன்னாள் தலைவரான டத்தோ பாலகிருஷ்ணன் தேசிய அளவில் பிரபலமானவர்.

கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களில் இவரும் ஒருவர்.

கடந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இன்னமும் கட்சி மற்றும் மக்களுக்காக அயராது உழைத்து வருகிறார்.
இவரின் பெயரும் பலமாக அடிபடுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles