
ஜெராம் பாடாங்.ஜூலை17: நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பாக ஜெராம் பாடாங் சட்டமன்ற வேட்பாளராக முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.மணிவண்ணனை முன்னிருத்தியிருப்பது அத்தொகுதி வாக்காளார் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கெஅடிலான் கட்சியின் சார்பில் பாக்காத்தான் கூட்டணி வேட்பாளராக களம் காணும் மணிவண்ணன் சிறந்த சேவையாளர்.மக்கள் பணியில் தன்னை நீண்டக்காலம் ஈடுப்படுத்தி கொண்டவர்.மக்களுக்கான பல்வேறு போராட்டங்களையும் மக்கள் நலனுக்காக நீதியை நிலைப்பெற செய்யவும் களம் கண்ட நேர்மையான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தொகுதி மக்களின் நலனிலும் அவர்களின் அடிப்படை தேவைகளிலும் தனித்துவ அக்கறைக் கொண்டவர்.எந்த சூழலிலும் மக்களுக்காக ஒலிக்கும் அவரது குரல் ஒருபோதும் பின் வாங்கியதுமில்லை,ஓய்ந்ததும் இல்லை எனலாம்’
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியை பாக்காத்தான் ஹராப்பான் வெற்றிக்கொள்ள சரியான நபரை இம்முறை கட்சி தேர்வு செய்திருப்பதாகவும் கெஅடிலான் கட்சியினர் புகழ்ந்துரைக்கும் நிலையில் மலேசிய அரசியலில் அனைத்து இன மக்களுக்கும் நன்கு அறிமுகமான மணிவண்ணன் சிறந்த தேர்வு என்றும் அத்தொகுதி மக்கள் நம்புகின்றனர்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாகவே மக்களின் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள மணிவண்ணன் வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் தனது தீவிர பிரச்சாரத்தை முன்னெடுப்பார்.அவருக்கு இப்பவே அத்தொகுதி மக்களின் ஆதரவு வெளிப்படையாக இருப்பதை காணமுடிகின்ற நிலையில் உள்ளூர் மக்களின் நன்கு அறிமுகமான வேட்பாளராகவும் அவர் நடப்பில் திகழ்கிறார்.
தேசிய முன்னணி வசமிருக்கும் இத்தொகுதியை இம்முறை பாக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும் என்னும் நம்பிக்கையில் அக்கூட்டணி ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில் மணிவண்ணனின் அரசியல் அனுபவமும் மக்களை அணுகும் திறன்மிக்க போக்கும் நிச்சயம் இம்முறை அத்தொகுதியை தேசிய முன்னணியிடமிருந்தும் கைப்பற்ற உதவும் எனலாம்.
மக்களின் உணர்வுகளை அறிந்து அவர்களின் தேவைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நன்சேவை செய்யக்கூடிய மணிவண்ணனை இம்முறை ஜெராம் பாடாங் மக்கள் தேர்வு செய்வார்கள் என்னும் நம்பிக்கையை வேட்பாளரான மணிவண்ணன் மட்டுமின்றி பாக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களும் வாக்காளர்களும் கூட பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.மக்களின் நம்பிக்கையே பாக்காத்தான் ஹராப்பானின் வெற்றியாக இத்தொகுதியில் உயிர்பெறும்.
நாளை நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் தீவிர பிரச்சாரத்தை கட்டமைத்துள்ள மணிவண்ணன் தனது அரசியல் அனுபவத்தாலும் மக்களுக்கான நனிச் சிறந்த சேவையாலும் தொகுதி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று இத்தொகுதியை மீட்டெடுத்து ஜெராம் பாடாங் தொகுதியை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியை பாக்காத்தான் ஹராப்பான் கைப்பற்ற நம்பிக்கையான விதை ஒன்றை அவர் விதைப்பார் என்று பெரும் நம்பிக்கை எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

