
சிரம்பான் ஜூலை 17-
கூட்டணி அரசியலில் பங்கெடுக்காமல் DAP கட்சியால் அரசியலில் வெகு தூரம் பயணிக்க முடியாது என்று DAP கட்சியின் பொது செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த DAP கட்சி ஒரு அதிகார நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூட்டணி அரசியலில் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அரசியலில் தனியாக களம் கண்டால், வெறும் எதிர்க்கட்சி தரப்பாக தான் இருந்து செயல்பட முடியும்.
நாட்டை முன்னேற்றும் அரசாங்கத்தில் இடம்பெற முடியாது என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தவணை முடியும் வரை DAP கட்சி தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் பயணிக்கும் என்றும் DAP கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து விலகாது என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் DAP கட்சியின் சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த கூட்டத்தில் 4000 DAP உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று போக்குவரத்து அமைச்சருமான லோக் சொன்னார்.

