மலேசிய இந்தியர் மக்கள் கட்சி சார்பில் லுக்குட் சட்டமன்றத் தொகுதியில் சதீஷ் குமார் போட்டி!

சிரம்பான் ஜூலை 16-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இம்முறை கூட்டணி அமைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம் 36 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணி 25 இடங்களில் போட்டியிடுகிறது.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் லுக்குட் சட்டமன்றத் தேர்தலில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி சார்பில் சதீஸ்குமார் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு லுக்குட் தொகுதியை ஒதுக்கிய பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles