நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல்! நாளை வேட்புமனு தாக்கல்

சிரம்பான் ஜூலை 17-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து நாளை ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமை 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.

சிரம்பான் நாடாளுமன்ற தொகுதிற்கு உட்பட்ட லோபாக், நீலாய், திமியாங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 8.00 மணிக்கு மேல் சிரம்பான் நகராண்மைக் கழக விஸ்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஐந்தாவது தடவையாக நீலாய் சட்டமன்ற தொகுதியில் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்பா சட்டமன்ற தொகுதியில் நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீரப்பன் சுப்பிரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்.

நாளை இவருக்கு ஆதரவாக துணை அமைச்சர் குலசேகரன், சின் தோங் ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles