
சிரம்பான் ஜூலை 18-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்றது.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று சிரம்பான் நகராண்மைக் கழக விஸ்மா மண்டபத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.
நீலாய் சட்டமன்றத் தொகுதியில் ஐந்தாவது தடவையாக போட்டியிடும் நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முகுந்தன் உட்பட பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முக்கிய தலைவர்கள் களம் இறங்கினர்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ, பேராக் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கூ ஹாம், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிசான், கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் ஆகியோரும் அடங்குவர்.
உலுலங்காட் தொகுதி கெஅடிலான் தலைவர் ராஜன் முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆதரவு தெரிவிக்க வந்தார்.
கடந்த நான்கு தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அருள் குமார் மீண்டும் வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

