
தம்பின், ஜூலை 18-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ரெப்பா தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் மீண்டும் போட்டியிடுகிறார்
கடந்த நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.

மீண்டும் ரெப்பா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இவருக்கு ஆதரவாக இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது சிலாங்கூர் கோத்தா கெமுனிங் ஜசெக தலைவர்கள் களம் இறங்கி ஆதரவு தெரிவித்தனர்.
ஷா ஆலம் கவுன்சிலர் திருமதி யோகேஸ்வரி உட்பட பலரும் களத்தில் இறங்கி பக்கத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

