நீலாய் நகரில் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே எனது முன்னுரிமை! அருள் குமார்

நீலாய் ஜூலை 23-
நீலாய் நகரில் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது முன்னுரிமை என்று நான் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.

இந்த வெள்ளப் பிரச்சினை இன்று ஏற்பட்ட ஒன்று அல்ல. பல ஆண்டுகளாக மக்களைப் பாதித்து வரும் நீண்டகால பிரச்சினையாகும்.

அதனால், இதற்கு நிலையான தீர்வை உருவாக்குவதற்காக மூன்று முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

✅ முதலாவது, நிலாய் நகரின் வடிகால் அமைப்பை மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

✅ இரண்டாவது, RM3.9 மில்லியன் செலவில் தேசா ஜாஸ்மின் நீர்த் தேக்கக் குளத்தை (Kolam Tadahan Desa Jasmin) மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கனமழைக் காலங்களில் அதிகளவு மழைநீரைத் தேக்கி வெள்ள அபாயத்தை குறைக்க முடியும்.

✅ மூன்றாவது, சுங்கை பாத்தாங் லாபு (Sungai Batang Labu) வெள்ளத் தடுப்பு திட்டமும் (RTB) தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் நான் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முயற்சிகளாகும். சில திட்டங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளன; மற்றவை தற்போது முன்னேற்றப் பாதையில் உள்ளன.

மக்களின் நலனே எங்கள் முன்னுரிமை. அளித்த வாக்குறுதிகளைச் செயலாக்கி, பாதுகாப்பானதும் சிறந்ததுமான எதிர்காலத்தை உருவாக்கும் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம் என்று நான்காவது முறையாக நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அருள் குமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles