மக்களை நெருக்கமாக சந்தித்து பக்கத்தான் ஹராப்பான் வெற்றியை உறுதி செய்யுங்கள்! அந்தோனி லோக்

சிரம்பான், ஜூலை 23-
நெகிரி செம்பிலான் முழுவதிலுமிருந்து திரண்ட ஆதரவாளர்கள், தேர்தல் இயந்திரத் தோழர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் உற்சாகமான பங்கேற்பு, வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு பக்காத்தான் ஹராப்பானுக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தும் உறுதியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், நெகிரி செம்பிலானில் போட்டியிடும் டிஏபி-யின் 11 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, டிஏபி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான மாண்புமிகு திரு அந்தோணி லோக் சியூ ஃபூக் அவர்கள் உற்சாகமூட்டும் உரையாற்றி, அனைத்து தேர்தல் இயந்திரத் தோழர்களும் தொடர்ந்து கடுமையாக உழைத்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, மக்களை நெருக்கமாகச் சந்தித்து, பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்பும் நெகிரி செம்பிலான் மக்களுக்கு நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் எங்கள் பயணத்திற்கு தொடர்ந்து ஊக்கமாக அமையட்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles