தாமான் ஸ்ரீ ரொம்பின் மக்களின் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காண்பேன்- மணிவண்ணன் அறிவிப்பு

பாடாங் ஜெராம், ஜூலை 23-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் பாடாங் ஜெராம் தொகுதியில் ஜி. மணிவண்ணன் போட்டியிடுகிறார்.

நேன்றைய மாலை, தாமான் ஸ்ரீ ரொம்பின் பகுதியில் நேரடியாக மக்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களின் நலன்களை அறியும் நடைபயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன் என்று அவர் சொன்னார்.

இந்த சந்திப்பின் போது, குறிப்பாக குடிநீர் விநியோகப் பிரச்சினை மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்து குடியிருப்பாளர்களின் கருத்துகளையும் மனக்குமுறல்களையும் கவனமாகக் கேட்டறிந்தேன்.

அவர்கள் பகிர்ந்த ஒவ்வொரு கருத்தும் மிகவும் முக்கியமானது; அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அன்பான வரவேற்பையும் ஆதரவையும் வழங்கிய தாமான் ஸ்ரீ ரொம்பின் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் தொடர்ந்து மக்களிடையே இறங்கி, அவர்களின் குரலை நேரடியாகக் கேட்டு, பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வுகளை கண்டறிய பாடுபடுவேன்.

மக்களின் நலனும் நம்பிக்கையும் எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles