
சிரம்பான் ஜூலை 23-
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் 30 ஆலய நிலப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
மக்களின் மத உரிமைகளையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் 30 ஆலயங்களின் நீண்டகால நிலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியுள்ளது.
நில உரிமை, குத்தகை மற்றும் சட்டரீதியான சிக்கல்களை எதிர் கொண்டிருந்த ஆலயங்களுக்கு, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் ஆலய நிர்வாகங்களுடன் இணைந்து செயல்பட்டு, மாநில அரசாங்கம் சுமுகமான மற்றும் நிலையான தீர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆலயங்களின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை முன்னெடுக்க மாநில அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முகுந்தன் கேட்டுக் கொண்டார்.

