
தம்பின் ஜூலை 23-.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிந்த கையோடு ரெப்பா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறேன்.
நேற்று காலை தாமான் தேசா பெர்மாய் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் நிகழ்வைத் தொடர்ந்தோம்.
பகுதி மிகவும் விரிவாக இருந்தபோதிலும்மலாக்கா ஜசெக DAPSY மற்றும் எங்கள் தேர்தல் இயந்திரத் தோழர்களுடன் இணைந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று வாக்கு சேகரித்தோம்.
கடந்த நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி இருப்பதால் ரெப்பா தொகுதி மக்களின் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ரெப்பா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் வீரப்பன் தெரிவித்தார்.

