சிலாங்கூரைக் கைப்பற்றச் சில அரசியல் கட்சிகள் இனவாத அரசியலைப் பயன்படுத்துகின்றன – டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சாடல்

ஷா ஆலாம், ஜூலை 23:

சிலாங்கூர் மாநிலத்தையும், அதன் தொடர்ச்சியாகக் கூட்டரசு அரசாங்கத்தையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகச் சில அரசியல் கட்சிகள் நாட்டின் பல்லினச் சமூகங்களுக்கு இடையே பாதுகாப்பற்ற உணர்வையும் அச்சத்தையும் விதைத்து வருவதாகச் சிலாங்கூர் டத்தோ மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குற்றம் சாட்டியுள்ளார்.

சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் (PAKATAN) தலைவரான அவர், நாட்டின் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, பல்லினச் சமுதாயத்தினரிடையே பயத்தை ஏற்படுத்துவதையே அந்தக் கட்சிகள் தங்களது முக்கிய அணுகுமுறையாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

அவர்கள் நமது சமூகங்களுக்குள், குறிப்பாக மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் ஒருவித பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தல் உணர்வை விதைத்து வருகிறார்கள். இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள கட்சிகள் எவை என்பதை அவர் பெயர் குறிப்பிடாமல் விவரித்த போதிலும், இத்தகைய அரசியல் தந்திரங்கள் மாநிலத்தின் நீண்டகாலத் ஸ்திரத்தன்மைக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன என எச்சரித்தார்.

சிலாங்கூர் மாநிலம் இன்று அடைந்துள்ள மகத்தான சாதனைகள் அனைத்தும் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் விளைவுதான் என்று சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles