தேமு-பெரிக்காத்தான் நேஷ்னல் ஒத்துழைப்பு முழுமையான வாக்கு மாற்றத்திற்கு உத்தரவாதமளிக்காது

மலாக்கா, நவ 8-

மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பு, இரு தரப்பு ஆதரவாளர்களின் வாக்குகளும் முழுமையாக ஒரே அணிக்குச் செல்லும் என்பதற்கு உத்தரவாதமளிக்காது என்று பக்காத்தான் ஹராப்பான்  மலாக்கா தரப்பு தெரிவித்துள்ளது.

மலாக்கா PH தலைவர் அட்லி சஹாரி கூறுகையில், அரசியல் கூட்டணி அமைந்துவிட்டதால் மட்டும் வாக்காளர்களின் ஆதரவு தானாகவே மாறிவிடாது என்றார். இரு கூட்டணிகளின் ஆதரவாளர்களும் இந்த ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் காணப்பட்ட அரசியல் நிலவரங்களையும் அவர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். புதிய வாக்காளர்களின் ஆதரவு, தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, தேசிய முன்னணி பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியின் அரசியல் பலத்தை மட்டும் கணக்கில் கொண்டு தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என்றும், வாக்காளர்களின் உண்மையான ஆதரவே மலாக்கா மாநிலத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் என்றும் அட்லி சஹாரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles