தேசிய முன்னணி – பாஸ் கூட்டணியால் என்ன நன்மை! மக்கள் சிந்திக்க வேண்டும் – டாக்டர் சத்யா நடராஜன்

சிரம்பான் ஜூலை 23-
தேசிய முன்னணி – பாஸ் கட்சி இடையிலான கூட்டணி நிலையற்றது என்று
சிலாங்கூர் மாநில் கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் கூறினார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணி, பாஸ், தேசியக் கூட்டணி அரசில் இணைந்து செயல்பட்ட காலகட்டத்தின் இறுதியில் அரசியல் நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உருவானதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

அரசியல் கூட்டணி என்பது தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல மாறாக நாட்டின் எதிர்காலம், நிர்வாகத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது.

இந்த ஒத்துழைப்பு உண்மையில் மக்களின் நலனுக்காகவா அல்லது அரசியல் அதிகாரத்திற்காகவா என்பதையே மக்கள் சிந்திக்க வேண்டும்.

முன்பு வெவ்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்த கட்சிகள் இன்று ஒன்றிணைந்திருப்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது.

ஒரு காலத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரு கட்சிகளும் இன்று அதிகாரத்திற்காக இணைந்திருந்தால், அவர்கள் முன்னிறுத்திய கொள்கைகள் எங்கே? என உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவருமான அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles