நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பிபிபி கட்சி தீவிர பிரச்சாரம்!

சிரம்பான் ஜூலை 24-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் தேசிய முன்னணி வெற்றிக்கு பிபிபி கட்சி தீவிர மாக களம் இறங்கி உள்ளது.

தேசிய முன்னணி 25 இடங்களில் போட்டியிடுகிறது.

தேசிய முன்னணி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் பிபிபி கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, துணை தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், டத்தோ இண்டர் ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட பலரும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றது.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் தேசிய முன்னணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles