

சிரம்பான் ஜூலை 24-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் இளம் வேட்பாளர் முகுந்தன் போட்டியிடுகிறார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் கடந்த நான்கு தேர்தல்களில் குணா வெற்றி பெற்றார்.
இம்முறை அவருக்கு பதிலாக இளம் வேட்பாளர் முகுந்தன் போட்டியிடுகிறார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் முகுந்தன் வெற்றிக்காக மலாக்கா காடேக் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சாமிநாதன் மற்றும் செனட்டர் தியாகராஜா ஆகியோர் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்தனர்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் முகுந்தன் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

