

லுக்குட் ஜூலை 24-
ஜனநாயக செயல் கட்சி (DAP) தலைமையின் ஆதரவு, நம்பிக்கை மற்றும் அங்கீகாரத்துடன் என்னை மீண்டும் லுக்குட் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நியமித்ததற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ கென் ஹா தெரிவித்தார்.
இது ஒரு பெருமை மட்டுமல்ல; மிகப் பெரிய பொறுப்பும், மக்களால் எனக்கு வழங்கப்பட்ட ஒரு பணியாகும்.
வரவிருக்கும் தேர்தல் பயணம் எளிதானதாக இருக்காது. ஆனால், ஜனநாயக செயல் கட்சியின் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, நேர்மை, அர்ப்பணிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை வழிகாட்டும் நெறிமுறைகளாகக் கொண்டு, மக்களின் குரலைக் கேட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து பாடுபடுவேன்.
தங்களின் தொடர்ந்த ஆதரவு, ஊக்கம் மற்றும் கண்காணிப்பை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மேலும் முன்னேற்றம், வளம் மற்றும் ஒற்றுமை நிறைந்த லுக்குட் தொகுதியை உருவாக்குவோம்.என்று அவர் கேட்டுக் கொண்டார்.

