200 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் தங்கம் வென்றார் சாந்தி

நகோயா, செப் 27-
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 200 மீட்டர் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா முதல் நிலையில் வந்து மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ஜப்பான் நகோயா பலோமா மிசுஹோ விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை சிங்கப்பூரின் சாந்தி பெரேரா நிலைநாட்டினார்.

சீனாவின் சென் யுஜி, தொடக்கத்தில் 0.15 நொடி வேகத்தில் மற்றவர்களை முந்திச் சென்றாலும், பந்தயத்தின் இறுதிப் பகுதியில் சாந்தி பெரேரா தமது இளம் போட்டியாளரை முந்திச் சென்று, 22.78 நொடி என்ற அந்தப் பருவத்தின் சிறந்த நேரத்துடன் தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles