
மலாக்கா, நவ 8-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அசஹான் தொகுதிக்கு உட்பட்ட ஃபெல்டா குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்ற டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மாயில், அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
அவருடன் பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் இயக்குநர் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜனும், அசஹான் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பி. டினேஷும் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களின் தேவைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

குறிப்பாக, அங்குள்ள வயதானவர்கள் எதிர்நோக்கும் நரம்பியல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் கேட்டறிந்த டாக்டர் சத்ய பிரகாஷ், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதுடன், நேரடியாக உடல்நலப் பரிசோதனைகளையும் மேற்கொண்டார். மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியும் இந்த அணுகுமுறை, தேர்தல் காலத்திலும் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதை வெளிப்படுத்தியது.

