நெகிரி மாநில மக்களே! மாநிலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்…

திமியாங், ஜூலை 24-

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் 

திமியாங் பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று ஜசெக கட்சியின் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு, குறிப்பாக N12 திமியாங் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான ஹோ வெங் வா அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கட்சியின் தலைமைத்துவ அணியுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

N12 தொகுதி மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவை செய்து, இம்முறை நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த அயராது உழைப்போம்.

நெகிரி செம்பிலான் மக்களே, உங்கள் வாக்கே மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். எனவே, பக்காத்தான் ஹராப்பானுக்கு மேலும் வலுவான மக்கள் ஆணையை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அந்த ஆணை, டத்தோ’ ஸ்ரீ உத்தாமா ஹாஜி அமினுடின் ஹரூன் அவர்களின் தலைமையில் தூய்மையான, நிலையான மற்றும் நேர்மையான நிர்வாகம் தொடர்வதை உறுதிசெய்யும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles