
தம்பின் ஜூலை 24-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ரெப்பா தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் மீண்டும் போட்டியிடுகிறார் .
கடந்த நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்ற இவரை ஜசெக கட்சி நம்பிக்கையோடு மீண்டும் களத்தில் இறங்கி உள்ளது.
ரெப்பா தொகுதி மக்களின் ஆதரவு இவருக்கு பலமாக உள்ளது.
இந்நிலையில் இவர் வீடு வீடாக சென்று வாக்கு திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

