போர்ட் டிக்சன் மண்ணின் மைந்தன் நான்! என்னை வெற்றி பெற செய்யுங்கள்… தேசிய முன்னணி வேட்பாளர் அச்சுதன் வேண்டுகோள் 

போர்ட் டிக்சன், ஜூலை 24-

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் அச்சுதன் போட்டியிடுகிறார்.

நான் இந்த போர்ட் டிக்சன் மண்ணில் பிறந்து வளர்ந்தேன்.

இங்குள்ள மக்கள் எனக்கு நேரடி தொடர்புடையவர் கள்.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும்.

போர்ட் டிக்சன் அதாவது ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக தேசிய முன்னணி வெற்றி பெற வில்லை.

இம்முறை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த தருணத்தில் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles