சிரம்பான் ஜெயா மக்களே! முகுந்தன் சிறந்த சேவையாளர் அவருக்கு வாக்களியுங்கள்

சிரம்பான் ஜூலை 25-
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்
முகுந்தன் சுப்பிரமணியம் புதிய வேட்பாளராக இருக்கலாம்.

ஆனால் சமூகப் பணியில் அவர் புதியவர் அல்ல.

முகுந்தன் பல ஆண்டுகளாக மக்களின் குறைகளை எடுத்துரைத்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, மாநில அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு பணியாற்றி வருகிறார்.

ஒரு நல்ல மக்கள் பிரதிநிதி, மக்களின் பிரச்சினைகளை மீண்டும் மக்களிடமே திருப்பி விடமாட்டார். அதற்குப் பதிலாக, சரியான அரசுத் துறையை அணுகி, நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, இறுதியில் மக்களுக்கு உரிய தீர்வும் பதிலும் கிடைப்பதை உறுதி செய்வார்.

அதுவே முகுந்தன் சுப்பிரமணியம் செரம்பான் ஜெயா மக்களுக்கு சேவையாற்ற விரும்பும் சிறந்த வேட்பாளர் என்று அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles