
சிரம்பான் ஜூலை 25-
மக்கள் முற்போக்குக் கட்சி (பிபிபி), நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை (PRN) முன்னிட்டு, அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட 13 சட்டமன்றத் தொகுதிகளில் கவனம் செலுத்தும் பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் கூறினார்.
வேட்புமனு தாக்கல் தினத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிகளில் பிபிபி தேர்தல் இயந்திரம் களமிறங்கி, வாக்காளர்களைச் சந்தித்து, தேசிய முன்னணி (தேமு) வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பிபிபி கவனம் செலுத்தும் தொகுதிகள் ஜெராம் பாடாங் (33.6%), ஸ்ரீ தஞ்சோங் (28.1%), ரந்தாவ் (27.4%), செரம்பான் ஜெயா (27.2%), லுக்குட் (26.2%), மம்பாவ் (25.7%), ரஹாங் (22.6%), புக்கிட் கெப்பாயாங் (22.2%), நிலை (21.6%), லோபாக் (21.5%), சுவா (21.4%), லிங்கி (16.8%) மற்றும் ரெம்பாவ் (16.6%)* ஆகும்.
இந்தத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருப்பதால், ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடையும் வகையில் பிபிபி தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் கூறுகையில் :” இந்திய வாக்காளர்களின் ஆதரவு தேர்தலில் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிலையான தலைமையும் வலுவான நிர்வாகமும் அவசியம்”,லோகா பாலா கூறினார்.
தேசிய முன்னணி மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுவருவதை நாங்கள் காண்கிறோம். இந்த நம்பிக்கையை வாக்குகளாக மாற்றுவது மிகவும் முக்கியம்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள் வெளிப்படுத்திய அபாரமான ஆதரவு, இந்திய வாக்காளர்கள் மீண்டும் தேசிய முன்னணி அணியை நோக்கி திரும்பி வருவதற்கான தெளிவான அறிகுறியாகும்.
இந்த நேர்மறையான எழுச்சி நெகிரி செம்பிலானிலும் தொடரும் என்றும், வரவிருக்கும் தேர்தல்களிலும் இது மேலும் வலுப்பெறும் என்றும் மக்கள் முற்போக்குக் கட்சி (பிபிபி) உறுதியாக நம்புகிறது.
இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் உறுதியான கொள்கைகளாகவும், பயனுள்ள செயல்திட்டங்களாகவும் மாற்றப்படுவதை உறுதி செய்ய பிபிபி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.
மக்களால் வழங்கப்படும் ஆணை, அனைத்து இன மக்களும் ஒட்டுமொத்த மலேசிய மக்களும் பயனடையும் வகையில் பயன்படுத்தப்படும்.
தேசிய முன்னானி மீண்டும் ஆதரிப்பது ஒரு முக்கியமான முதல் படியாகும். ஆனால் அந்த ஆதரவு வாக்குச் சீட்டில் பிரதிபலிக்க வேண்டும். எனவே, நெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து இந்திய வாக்காளர்களும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் திரளாக வந்து, தேசிய முன்னானி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்கை அளிக்குமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எண்று லோகா பாலமோகன் கூறினார்.

