
கடந்த பிப்ரவரி மாதம் விபத்தில் இறந்த லோரி டிரைவரான மறைந்த லீ எங் டோங்கின் மனைவி மற்றும் இளைய குழந்தை ஆகியோருக்கு உதவும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகையை மனித வள அமைச்சர் வ.சிவகுமார் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
1969 ஆம் ஆண்டு தொழிலாளர் பேரிடர் திட்டம், தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் மூலம் மாதம் ஒன்றுக்கு RM3735.00 உதவித் தொகையை இவர்கள் பெறுகிறார்கள்.
கடந்த பிப்ரவரி 15 அன்று, மெனோரா சுரங்கப்பாதை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் 266.5 இல் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் லீ எங் டோங் பலத்த காயமடைந்தார்.
சிகிச்சை பெறுவதற்காக பேராக், ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் தலையில் பலத்த காயம் காரணமாக 12 நாட்களுக்கு உயிருக்கு போராடிய பின்னர் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.
சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இப்போது இவரின் குடும்பத்திற்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நேற்று இவரின் இல்லத்திற்கு நேரடி வருகை புரிந்த மனித வள அமைச்சர் வ. சிவகுமார் உதவித் தொகை பெறும் கடிதத்தை வழங்கினார்
சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோஸ்ரீ அஸ்மான், மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

