ஜாலான் மஸ்ஜிட் இந்தியா வீரா பத்ர காளியம்மன் ஆலய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!

கோலாலம்பூர் ஆக 25-
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மிகவும் பிரபலமான வீரா பத்ர காளியம்மன் கோயில் கட்டுமான பணிகளை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று நேரில் பார்வையிட்டார்.

இன்று காலை 11.00 மணிக்கு மேல் கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோவை கோயில் தலைவர் பார்த்தீபன் வரவேற்றார்.

பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

கோயில் நிர்வாகம் கொடுத்த மரியாதையை ஏற்றுக் கொள்ள கோபிந்த் சிங் டியோ தமது சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பிறகு புதிய கோயில் கட்டப்படும் இடத்தை அவர் பார்வையிட்டார்.

இரண்டு மாடிகள் கொண்ட புதிய கோயில் கட்டுமான பணிகள் தொடர்பாக கோயில் நிர்வாகம் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கு விளக்கம் அளித்தது.

கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.

கோயில் திருப்பணி வெற்றிகரமாக பூர்த்தி அடைய முழு ஆதரவு வழங்கி வருவதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இதனிடையே கோயில் தலைவர் பார்த்தீபன் பேசுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு மற்றும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

கோயில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணிக்கு நிதி தேவைப்படுவதால் பொதுமக்கள் நன்கொடை கொடுத்து ஆதரவு தரும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles