


கோலாலம்பூர் ஆக 5-
எஸ்டிபிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 41 இந்திய மாணவர்களுக்கு மலேசிய சீருடி சாய்பாபா இயக்கம், பிபிஎன் மாணவர்கள் தங்கும் விடுதி, சுவாமி ஐயப்பன் இயக்கம் மற்றும் ஜொகூர் ஜெயா டீரி சார்பில் இன்று சிறப்பு செய்யப்பட்டது.
2026 ஆம் ஆண்டு சாதனைகள் விழா இன்று பிரிக்பீல்ட்ஸ் சீருடி சாய்பாபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மற்றும் இறை வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் டிஎல்எஸ் மணியம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இந்த விழா வெற்றி பெற ஆதரவு மற்றும் மடிக்கணினிகள் வழங்கிய நல்லுள்ளம் களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் சிறப்பு வருகை தந்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
எஸ்டிபிஎம் தேர்வு மிகவும் கடினமானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 மாணவர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.
சன்வே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டத்தோ டாக்டர் அகமுத்து பெரிய தம்பி இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.
தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் டத்தோ சங்கரன், ஜெயா டீரி தலைவர் கிருஷ்ணசாமி, விவேகஸ்ரீ ராஜரத்தினம், வெற்றி வேலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

