கோலலங்காட் தொகுதியின் பிபிபி கட்சியின் மக்கள் சேவை மையத்தை டத்தோ டாக்டர் லோகபாலா திறந்து வைத்தார்

பந்திங், செப் 17-
கடந்த 16.9.2026 தேதி புதன்கிழமை தெலுக் பங்லிமா காராங் நகரில் கோலலங்காட் தொகுதி மலேசிய மக்கள் முற்போக்கு கட்சியின் PPP அலுவலகம் மற்றும் மக்கள் சேவை மையத்தையும் PPP தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.

அவர் தமதுரையில் இவ்வட்டாரத்தில் உள்ள பல்லின சமூக மக்களுக்குச் சிறந்த முறையில் கிளை மற்றும் தொகுதித் தலைவர்கள் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசியல் என்பதே மக்கள் சேவைதான் என்றும் அதை தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது எப்பொழுதும் தொடர்ந்து செய்து வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில PPP மாநிலத் தலைவர் உயர்திரு.மு. சுரேந்தின் அவர்கள் தமதுரையில் சிலாங்கூர் மாநிலத்தில் PPP பல்லின மக்களின் அன்பையும் அபிமானதத்தையும் பெற்று வருவதாக கூறினார்.

சீஜங்காங் தொகுதி ஒருங்கிணைப்பாளரும்,கோல லங்காட் தொகுதி அம்னோ தலைவருமான மதிப்புமிகு டத்தோ ஷூரியான் பின் யூசோப் அவர்கள் PPPயின் சேவையையும் தலைமைத்துவத்தையும் பாராட்டிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் PPP தேசிய உதவித்தலைவர் உயர்திரு.இந்தர்சிங் அவர்களும் தேசிய மகளிர் தலைவி குமாரி புனிதா அவர்களும், தேசிய இளைஞர் பிரிவத் தலைவர் திரு.சத்தியா சுதாகரன் அவர்களும் மற்றும் PPP தேசிய மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களும்,தொகுதி மஇகா தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அவர்களோடு சிறப்பாக கோலலங்காட் தொகுதி மஇகா தலைவர்கள் தன் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்து சிறப்பித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles