
கூச்சிங், செப் 17 : செப்டம்பர்-அக்டோபர் நுழைவில் பொது உயர்கல்வி கூடங்களில் தங்களது படிப்பைத் தொடங்கும் நாடு முழுவதும் உள்ள 7,095 மாணவர்கள், ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 500 ரிங்கிட் விமானக் கட்டண உதவியைப் பெறுவர்.
நேற்றிரவு , கூச்சிங்கில் நடைபெற்ற மலேசியத் தினக் கொண்டாட்டத்தின் போது உரையாற்றுகையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.
இந்த விமானக் கட்டண உதவி பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் நுழையும் மாணவர்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
“தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாக் அல்லது லபுவான் ஆகியவற்றுக்கு இடையே தங்களது படிப்பைத் தொடங்குவதற்காக விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டிய 7,095 மாணவர்களுக்கு இந்த உதவி பயனளிக்கும்,” என்று அவர் கூறினார்.

